முதல் பக்கம் தொடர்புக்கு


இடுக்குவான் குந்து எனப்படும் மூன்று நாள் காய்ச்சல்

   இந்நோயினைப் பற்றி

    நோய்க்கான காரணம்
  • இடுக்குவான் குந்து எனப்படும் நோய் பசு மற்றும் எருமை மாடுகளைத் தாக்கக்கூடிய  வைரஸால் ஏற்படும் நோயாகும்.
  • ஆறு மாதம் முதல் இரண்டு வயதுடைய மாடுகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் ரேப்டோவைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது.

   நோய் பரவும் முறை  
  • சேண்ட் ஃபிளை எனும் பறக்கும்பூச்சிகள் வழியாக  இந்த நோய் பரவுகிறது.
  • குயூலெக்ஸ்,குயூலிகாய்டஸ் ரகத்தினைச்  சேர்ந்த கொசுக்கள்  மூலமாகவும் இந்த நோய் பரவுகிறது.
  • கால்நடைகளின் நேரடித் தொடர்பு மூலமாகவோ அல்லது  கால்நடைகளின்  எச்சில்,சளி மூலமோ இந்நோய் பரவுவதில்லை.
  • காற்றின் மூலமாக  இந்த நோய் ஏற்படுத்தும் வைரஸ் விரைவில் பரவுகிறது. ஐந்து மாத கால இடைவெளியில் இந்த வைரஸ் 3000 மைல்கள் பரவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • நோய் ஏற்படுத்தும் வைரஸ் மாடுகளின் உடலுக்குள் சென்ற 5ம் நாள் மாடுகளின் இரத்தத்தில் இருக்கும்.கொசுக்கள் மற்றும் இதர  பூச்சிகள் மாடுகளைக் கடிப்பதன் மூலம் இந்நோயைப் பரப்புகின்றன. நோயின் தாக்குதலுக்குள்ளாகும் கால்நடைகளில் 0.002 மிலி இரத்தம்  நோயினை உண்டாக்கப் போதுமானது.
  • நோயினால் பாதிக்கப்பட்டு, நலமடைந்த கால்நடைகளில் இந்த வைரஸ் இருக்காது. ஆனால் சில விலங்குகள் இந்நோயினை ஒரு பருவநிலைக் காலத்திலிருந்து மற்றொரு பருவ நிலைக்கு பரப்புகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது.
  • பாதிக்கப்பட்ட மாடுகளின் இரத்தத்தை மற்ற மாடுகளுக்குச் செலுத்துவதால்  இந்நோய் பரவும்.

top

   அறிகுறிகள்

    நோயின் அறிகுறிகள்
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் உடல் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும்.
  • உடல் மற்றும் தசைகளில்  நடுக்கம்.
  • பாதிக்கப்பட்ட மாடுகள் நடக்க மிகவும் சிரமப்படுதல்.வலுக்கட்டாயமாக மாடுகளை நடக்க வைக்கும்போது மிகவும் சிரமப்பட்டு வளைந்த முதுகுடன் நடத்தல்.
  • மாடுகளில் தீவனம் எடுப்பது மிகவும் குறைதல்  மேலும் பால் உற்பத்தியும் கணிசமாகக் குறைதல்
  • வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, மூக்கில் சளி வடிதல்,  கண்ணில் நீர் வடிதல்.
  • பாதிக்கப்பட்ட மாடுகளின் தசைகள் கடினமாக, விரைப்பாக இருப்பதுடன், வலியும் காணப்படுதல்
  • பாதிக்கப்பட்ட மாடுகள் நொண்டிக்கொண்டு நடத்தல்.
  • மிகவும் பாதிக்கப்பட்ட மாடுகள் பின்னங்கால்கள் விரைப்புடன் கீழே படுத்துக்கொள்ளுதல்.
  • நோய்  அறிகுறிகள் வெளிப்பட்ட  சில மணி நேரங்களில் கால்கள் பாதிக்கப்பட்டு மாடுகள் நொண்டிக்கொண்டிருத்தல்.
  • நோயினால் பாதிக்கப்பட்டு படுத்திருக்கும் மாடுகளில் அசைபோடுதல் பாதிக்கப்பட்டு வலியால் முனகிக்கொண்டும், பற்களைக் கடித்துக்கொண்டும் இருத்தல்.

top
   மேலாண்மை முறைகள்

    நோயினைக் கட்டுப்படுத்துதல்  
  • நோயினைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதே நோயினைக்  கட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாகும்.
  • தற்போது இந்நோயினைத் தடுப்பதற்கு எந்தவொரு தடுப்பூசியும் இல்லை.

top